2009-11-24 15:47:21

வியட்நாமில் ஒரு லட்சத்து இருபதாயிரம் கத்தோலிக்கர்களின் பங்கேற்புடன் புனித ஜுபிலி ஆண்டு கொண்டாட்டங்கள் துவக்கப்பட்டன


நவ.24,2009 வியட்நாமில் இத்திங்களன்று மாலை பல கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள் மற்றும் ஒரு லட்சத்து இருபதாயிரம் கத்தோலிக்கர்களின் பங்கேற்புடன் புனித ஜுபிலி ஆண்டு கொண்டாட்டங்கள் துவக்கப்பட்டன.

கர்தினால்கள் Roger Marie Elie Etchegaray, Andre Armand Vingt - Trois, Bernard Francis Law, Jean Baptiste Pham Minh Man மற்றும் வியட்நாமின் 26 மறைமாவட்டங்களின் ஆயர்கள், வெளிநாட்டு குருக்களுடன் இணைந்து 1200 குருக்கள் என பெரிய அளவில் திருச்சபை அதிகாரிகள் பங்கேற்ற இத்துவக்கக் கூட்டத்தில், வியட்நாமில் கிறிஸ்தவத்திற்காக உயிரிழந்த எண்ணற்ற மறை சாட்சிகள் நினைவுகூரப்பட்டனர்.

வியட்நாம் வரலாற்றில் கிறிஸ்தவத்திற்காக மறை சாட்சிகளாக உயிரிழந்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சத்து முப்பதாயிரம் கிறிஸ்தவர்களுள் 117 பேர் 1988ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். 








All the contents on this site are copyrighted ©.