2009-11-23 16:33:12

புனிதபூமியில் இடம் பெற்ற முத்திப்பேறு பெற்ற நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, திருத்தந்தை


நவ.23,2009 ஞாயிறு மூவேளை செப உரையில், ஞாயிறன்று புனித பூமியின் நாசரேத்தில் இறையடியார் Maria Alfonsina Danil Ghattas என்பவரை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்த திருப்பலியில் கலந்து கொண்டோரையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

அன்னை Ghattas புனித பூமியின் பெண்களுக்கென ஒரு துறவு சபையை ஆரம்பித்து அப்பகுதியில் மறைக்கல்வி வழங்கி, பெண்களுக்கு கல்வியறிவூட்டி அவர்களின் நிலைமைகளை மேம்படுத்த விரும்பினார் என்று கூறினார் அவர்.

முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தும் இந்த நிகழ்ச்சியானது, புனித பூமி கத்தோலிக்கச் சமூகத்திற்கு ஆறுதல் தருவதாக இருக்கின்றது மற்றும் இது, இறைபராமரிப்பு மற்றும் மரியின் தாய்க்குரிய பாதுகாப்பில் எப்போதும் உறுதியான நம்பிக்கை வைப்பதற்கு அழைப்புவிடுப்பதாக இருக்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.

நாசரேத்தில் மங்களவார்த்தை பசிலிக்காவில் இடம் பெற்ற முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தும் இந்தத் திருப்பலியை, திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதியாக, திருப்பீட புனிதர் நிலைத் தலைவர் பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ நிகழ்த்தினார்.

முத்திப்பேறு பெற்ற அன்னை Ghattas பாலஸ்தீனியராவார்.








All the contents on this site are copyrighted ©.