2009-11-23 16:30:28

நவம்பர் 24 நற்செய்தி லூக். 21, 5-11


அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார்.7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.








All the contents on this site are copyrighted ©.