2009-11-21 16:55:24

கானடாவில் அகதிகள் நடத்தப்படும் விதம் குறித்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் முயற்சி


நவ.21,2009 கானடாவில் அகதிகள் நடத்தப்படும் விதம் குறித்து அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கத்தோலிக்க ஆயர் உட்பட கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

கானடாவின் தற்போதைய அகதிகள் அமைப்பு குறித்து பிரதமர் கருத்தாய் இருந்தாலும் அவரது அரசின் சில பிரதிநிதிகள், அகதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நாட்டின் கடமையிலிருந்து விலகுவது போன்று தெரிவதாக, கிறிஸ்தவ தலைவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதம் கூறுகிறது.

எனவே இது குறித்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதியும் கேட்டுள்ளனர் கிறிஸ்தவத் தலைவர்கள்.

கானடாவில் 2005ம் ஆண்டிலிருந்து மெக்சிகோவிலிருந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியுள்ளது என்றும் எனினும் அடைக்கலம் கேட்கும் அந்நாட்டினரில் 90 விழுக்காட்டினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

 








All the contents on this site are copyrighted ©.