2009-11-20 17:35:22

உலக அளவில் சிறாரின் உரிமைகள் இன்னும் முழுமையாய் மதிக்கப்படவில்லை, யூனிசெப் கவலை


நவ.20,2009 உலக அளவில் சிறாரின் ஒட்டு மொத்த வாழ்வில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும், அவர்களின் உரிமைகள் இன்னும் முழுமையாய் மதிக்கப்படவில்லை என்று ஐ.நா.வின் குழந்தை நல நிதி அமைப்பான யூனிசெப் கூறியது.
பல சிறார் பள்ளிக்கே செல்லாமல் இருக்கின்றனர் எனவும், 50 கோடி முதல் 150 கோடி வரையிலான சிறார், வன்முறை, பாகுபாடு, புறக்கணிப்பு, தவறாகப் பயன்படுத்தப்படல் போன்றவற்றால் துன்புறுகின்றனர் எனவும் யூனிசெப் இயக்குனர் Ann Veneman கூறினார்.
ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்பு 28 விழுக்காடு குறைந்திருந்தாலும், இவ்வயதையுடைய 24 ஆயிரம் சிறார் இன்னும் ஒவ்வொரு நாளும் தடுத்து நிறுத்தக்கடிய நோய்களால் இறக்கின்றனர் என்றும் ஐ.நா. கூறியது.1989ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கையெழுத்திடப்பட்ட சர்வதேச சிறாரின் உரிமைகள் ஒப்பந்தத்தை 193 நாடுகள் அமல்படுத்தி வருகின்ற போதிலும் நூறு கோடிச் சிறாருக்கு போதிய உணவும் குடியிருப்பும் நலவாழ்வு வசதிகளும் இல்லை என்று ஐ.நா. தெரிவித்தது.







All the contents on this site are copyrighted ©.