2009-11-19 15:33:31

பங்களாதேஷ் பிரதமரையும்புருண்டியின் அரசுத் தலைவரையும் திருத்தந்தை சந்தித்தார்


நவ.19,2009 இப்புதனன்று நடைபெற்ற புதன் போது மறைபோதகத்திற்குப் பின்னர், திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவைச் சந்தித்துப் பேசினார். பங்களாதேஷில் இன்று நிலவும் பல பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. அந்நாட்டில் மனித உரிமைகள் காக்கப்படுவது குறித்தும், அரசுக்கும் திருச்சபைக்கும் இடையே நிலவும் உறவு குறித்தும் பேசப்பட்டது. திடுத்தந்தையைச் சந்தித்த பின், பிரதமர் திருப்பீடச் செயலர் கர்தினால் டார்சிஸியோ பெர்தொனேயையும், அரசுகளுடனானத் தொடர்புச் செயலர் பேராயர் டோமினிக் மம்பெர்த்தியையும் சந்தித்தார். மேலும், இச்செவ்வாயன்று மாலை திருத்தந்தை புருண்டி குடியரசின் தலைவர் Pierre Nkurunziza வைச் சந்தித்து பேசினார்.







All the contents on this site are copyrighted ©.