2009-11-19 15:35:19

ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவின் வருகையால் ஒரிஸ்ஸா திருச்சபையில் நம்பிக்கை  


நவ.19,2009 ஐந்து பேர் கொண்ட ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு வருகை தந்திருப்பது நம்பிக்கையை உண்டாக்கியிருப்பதாக, ஒரிஸ்ஸாவின் திருச்சபைத் தலைவர்கள் கூறியுள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு எதிராக சென்ற ஆண்டு நடந்த வன்முறைகளைக் குறித்து அறிய வந்திருக்கும் இக்குழு, தங்கள் ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும், முடிந்தமட்டும் இந்திய அரசை உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தப் போவதாகவும்  தெரிவித்துள்ளது. கட்டக்-புபனேஸ்வர் உயர் மறைமாவட்டங்களில் சமூகப் பணிக் குழுவின் இயக்குனராகப் பணியாற்றும் அருட்திரு அஜய் சிங் உலக நாடுகளின் பிரதிநிதிகள் வந்திருப்பது, இக்கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்துள்ளது என்று கூறினார். இம்மக்களுக்கு உரிய நீதி வழகுவதில் ஒரிஸ்ஸா அரசை நிர்பந்தபடுத்த பன்னாட்டு அரசுகளின் தலியீடு உதவியாக இருக்கும் என பேராயர் Raphael Cheenath கூறினார். அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் கந்தமால் பகுதியில் அமைதி நிலை உருவாகப் பல ஆண்டுகள் ஆகும் என்று ஆயர் சீனத் பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்தார். இப்பிரதிநிதிகள் குழு கந்தமாலிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசினர்.







All the contents on this site are copyrighted ©.