2009-11-18 16:03:21

கொசோவோ நாட்டில் அன்னை தெரசா பிறந்த 100வது ஆண்டைக் கொண்டாடுவதற்கான திட்டங்கள்


நவ.18,2009 அன்னை தெரசா பிறந்த 100வது ஆண்டைக் கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுக்க கொசோவோ நாட்டின் உயர்மட்டக் குழு ஒன்று அண்மையில் கூடியது. கலாச்சார அமைச்சர் Valton Beqiri தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அருட்தந்தை Lush Gjergji யும் கலந்து கொண்டார். சமாதானத்திற்க்கான நோபெல் பரிசை அன்னை தெரசா பெற்ற 30ஆம் ஆண்டு நிறைவுறும் டிசம்பர் 10ஆம் தேதியன்று இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்கள் துவங்கி, 2010ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிறந்து, 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி மறைந்த அன்னை தெரசாவை, 2003ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் அன்னை தெரசா காலமான செப்டம்பர் 5 அன்னையின் நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.