2009-11-16 17:35:07

செர்பிய ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதா பாவ்லே இறைபதம் சேர்ந்தார்


நவ.16,2009 இஞ்ஞாயிறன்று காலமான செர்பிய ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதா பாவ்லே ஆர்த்தடாக்ஸ் துறவுமட ஆன்மீகப் பாரம்பரியத்தின் மிகப் பெரும் பிரதிநிதியாகவும், ஜெபம் மற்றும் ஆன்மீகத்தின் உயர் மனிதராகவும் கத்தோலிக்கத்தில் மதிக்கப்பட்டு வந்ததாக அறிவித்தார் திருப்பீட பேச்சாளர் இயேசு சபை குரு பெடெரிகோ லொம்பார்தி.

சனியன்று காலை செர்பிய அரசுத் தலைவரை திருத்தந்தை சந்தித்த போது, ஆர்த்தடாக்ஸ் பிதப்பிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், அவருக்கான ஜெபத்திற்கு உறுதி கூறியதாகவும் எடுத்துரைத்த திருப்பீடப் பேச்சாளர், ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கிடையேயான இறையியல் பேச்சுவார்த்தைகளில் பிதாப்பிதா பாவ்லே காட்டிய ஆர்வத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

1990ஆம் ஆண்டு முதல் செர்பிய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைவராக செயல்பட்டு வந்த பிதாப்பிதா பாவ்லே இஞ்ஞாயிறன்று இறைபதம் சேர்ந்தார்







All the contents on this site are copyrighted ©.