2009-11-16 17:18:32

சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


நவ.16,2009 சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்காகச் செபிக்குமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

நவம்பர் 15ம் தேதி ஞாயிறன்று சாலை விபத்துக்களில் இறந்தவர்களை நினைவு கூரும் சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு, ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

நீண்ட தூரம் பயணம் செய்து இங்கு வந்திருப்பவர்கள் பாதுகாப்பாக வீடு போய்ச் சேருவதற்குத் தான் செபிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இறந்தவர்களை நினைவுகூரும் இந்த நவம்பர் மாதத்தில், உத்தரிக்கிற ஸ்தலத்தில் இன்னும் வேதனைப்படுவோரையும், போர்களில் இறந்தவர்களையும் நினைத்து அவர்களுக்காகச் செபிப்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.

இத்தாலியில் கடந்த ஆண்டில், ஒரு நாளைக்கு 13 பேர் என, 4731 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர். இவர்களில் அதிகம் இறப்பவர்கள், 18க்கும் 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

எனினும் சாலை விபத்துக்களில் இறப்போரில் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டுள்ள நாடு போலந்து எனச் சொல்லப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.