2009-11-14 14:35:24

மன்னார் மாவட்டத்திலுள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள், மிகவும் கஷ்டப்படுகின்றனர்


நவ.14,2009 இலங்கை மன்னார் மாவட்டத்திலுள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள், சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்டும், வேலைகள் கிடைக்காமலும் இளம் சிறாரோடு பொருளாதார வாய்ப்புகள் இன்றியும் கஷ்டப்படுகின்றனர் என்று ஒரு சமூக நடவடிக்கையாளர் தெரிவித்தார்.
இந்த விதவைகளில் பலர் தங்கள் கணவர்களைப் போரில் பலி கொடுத்தவர்கள் என்றும், இவர்கள் அரசின் உதவியின்றி தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் இருக்கின்றனர் என்றும் PPD என்ற அமைதி பற்றிய மக்கள் உரையாடல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சேசுதாசன் கூறினார்.
இந்தக் கைம்பெண்கள் குறைந்தது பத்து ஆண்டுகளாவது இந்நிலைமையோடு போராட வேண்டியிருக்கும் என்றுரைக்கும் அவர், இவர்களும் அரசின் ஒருங்கிணைந்த அங்கங்கள் என்பதால் அரசு உதவ முன்வருமாறு கேட்டுள்ளார்.
மேலும், இலங்கை கூட்டுப்படைத் தளபதி பதவியில் இருந்து இம்மாத முடிவில் விலகுவதாக ஜெனரல் சரத் பொன்சேகா வழங்கிய கடிதத்தை அரசு ஏற்றுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.