2009-11-14 14:33:03

ஒபாமா நிர்வாகம் கியூபா நாட்டிற்கான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை அகற்றும், திருப்பீடம் நம்பிக்கை


நவ.14,2009 கியூபா நாட்டிற்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரத் தடை, கியூப மக்களில் சொல்லற்கரிய துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக் காட்டும் திருப்பீடம், ஒபாமா நிர்வாகம் அத்தடைகளை அகற்றும் என நம்புவதாக தெரிவித்துள்ளது.
அண்மையில் கியூபா நாட்டிற்குத் தான் மேற்கொண்ட சுற்றுப் பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, திருப்பீட சமூகத் தொடர்புத் துறைத் தலைவர் பேராயர் க்ளவ்தியோ மரிய செல்லி, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் அப்பாவி பொது மக்களில் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புக்களை விளக்கினார்.
கியூபாவில் கத்தோலிக்கத் திருச்சபை, மிகக் குறைவான வளங்களையே கொண்டுள்ளது மற்றும் சமூகத் தொடர்பு சாதனங்களை ஒரு வரையறைக்குள்ளேதான் பயன்படுத்துகின்றது என்றும் பேராயர் செல்லி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.