2009-11-14 14:29:27

உலகில் பசிக்கொடுமையை அகற்றுவதற்கு, குறுநில விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்படுமாறு கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் அழைப்பு


நவ.14,2009 உலகில் பசிக்கொடுமையை அகற்றுவதற்கான வழிகளில் ஒன்றாக, குறுநில விவசாயிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உதவிகள் வழங்கப்படுமாறு சர்வதேச கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் அழைப்பு விடுத்தன.
வருகிற திங்களன்று உரோமையிலுள்ள FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத் தலைமையகத்தில் தொடங்கும் மூன்று நாள் உலக மாநாட்டிற்குத் தயாரிப்பாக அறிக்கை வெளியிட்ட காரித்தாஸ் மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் இவ்வாறு கூறினர்.
தற்சமயம் கிழக்கு ஆப்ரிக்காவில் இரண்டு கோடியே முப்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு அவசர உணவு உதவி தேவைப்படுகின்றது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த நவம்பர் 16 முதல் 18 வரை நடைபெறவிருக்கின்ற, உணவு பாதுகாப்பு குறித்த முக்கியமான உலக மாநாட்டிற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தவிர, பிற சமயத் தலைவர்கள் அழைக்கப்படாதது குறித்து குறை கூறியுள்ளார் உலக இந்துத்துவ கழகத் தலைவர் ராஜன் செட்.







All the contents on this site are copyrighted ©.