2009-11-14 15:36:43

இன்றைய புனிதர்: புனித பெரிய ஆல்பர்ட்


12ஆம் நூற்றாண்டின் இறுதியில் தெற்கு ஜெர்மனியில் பிறந்த இவர், டொமினிகன் சபையில் சேர்ந்தார். இறையியலில் மாபெரும் தேர்ச்சி பெற்ற இவர், பல பல்கலை கழகங்களில் இறையியல் சொல்லித்தந்தார். இவரது மாணவர்களில் புனித ஜான் அக்வினாஸும் ஒருவர். இவரது வகுப்புகள் மிகவும் சிறந்த முறையில் இருந்ததால், மிக அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இவரது வகுப்புகளுக்கு வந்தனர். இதனால், இவரது பாடங்களை வகுப்புகளில் நடத்த முடியாமல், திறந்த வெளிகளில் நடத்தினார். இவரும் இவரது மாணவர் புனித அக்வினாஸும் அறிவு சார்ந்த விசுவாசத்தை தங்கள் இறையியல் விளக்கங்களில் பறைசாற்றினர். 1280ஆம் ஆண்டு நவம்பர் 15 இறந்த ஆல்பர்ட், 1931ஆம் ஆண்டு 11ஆம் பத்திநாதர் எனும் திருத்தந்தையால் புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.