2009-11-13 17:20:02

புகழ் பெற்ற யூத மத குரு டேவிட் டாலின் - யூதர்களை ஹிட்லர் அழிப்பதற்கு திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் துணை செய்தார் என்பதற்கு வரலாற்றில் எந்தவித ஆதாரமும் இல்லை


நவ.13,2009 யூதர்களை ஹிட்லர் அழிப்பதற்கு திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் துணை செய்தார் என்பதற்கு வரலாற்றில் எந்தவித ஆதாரமும் இல்லை எனவும், இது திருத்தந்தையின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் ஒரு முயற்சி என்றும் புகழ் பெற்ற யூத மத குரு டேவிட் டாலின் (David Dalin) கூறியுள்ளார். ஆவே மரியா என்ற பல்கலைகழகத்தின் பேராசிரியாரான யூத குரு டாலின் வெளியிட்ட "The Myth of Hitler 's Pope : How Pius XII Rescued Jews from the Nazis" என்ற நூலில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜான் கொர்ன்வேல் (John Cornwell) கூறிய கருத்துக்கள் வரலாற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவை என்று கூறிய யூத குரு டாலின், நாசியின் ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பாவில் வாழ்ந்த 80 விழுக்காட்டிற்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்ட போது, இத்தாலியில் வாழ்ந்த 85 விழுக்காட்டிற்கும் அதிகமான யூதர்கள் காப்பற்றப் பட்டுள்ளனர், அதிலும், ரோமையில் மட்டும் பல துறவு மடங்களிலும்,  திருத்தந்தையின் கோடை இல்லமான காஸ்தெல் கன்டோல்போவிலும் யூதர்களுக்குப் புகலிடம் அளிக்கப் பெற்றதால், அவர்கள் பெருமளவில் காப்பற்றப் பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். காஸ்தெல் கன்டோல்போவில் மட்டும் 3000க்கும் அதிகமான யூதர்கள் பதுக்கி வைக்கப் பட்டனர் என்றும், நாசியின் ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பாவில் இந்த ஒரு இடத்தில் மட்டும்தான் அதிகப்படியான யூதர்கள் காப்பாற்றப்பட்டனர் என்றும் யூத குரு டேவிட் டாலின் Tulane பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றுகையில் குறிப்பிடப்பட்டுள்ளார்







All the contents on this site are copyrighted ©.