2009-11-13 16:30:30

நவ. 14. புனித ஜோசப் பிக்னடெல்லி சே.ச


1737ம் ஆண்டு ஸ்பெயினில் சரகோசாவில் பிறந்த ஜோசப் பிக்னடெல்லி ஒரு இயேசு சபை குரு. அரசியல் விவகாரங்கள் தொடர்பாக, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி போன்ற நாடுகளில் 1773ம் ஆண்டில் திருத்தந்தை 14ம் கிளமென்ட் இயேசு சபையை இரத்து செய்தார். அச்சமயம் அச்சபையில் உலகெங்கும் 23 ஆயிரம் இயேசு சபையினர் இருந்தனர். திருத்தந்தையின் அந்நடவடிக்கையினால் ஸ்பெயினிலிருந்து மட்டும் ஐந்தாயிரம் பேர் நாடுகடத்தப்பட்டனர். பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி முதலிய நாடுகளில் அவர்கள் விரட்டப்பட்டனர். எனினும் இரஷ்யாவை ஆண்டு வந்த அரசி கத்தரீன் அதனை ஏற்காமல் அச்சபையினருக்கு அடைக்கலம் கொடுத்தாள். எனவே இரஷ்யாவிலிருந்த இயேசு சபையினரின் உதவியுடன் பார்மாவில் ஓர் இயேசு சபை மறைமாநிலம் உருவானது. அப்பொழுது புதிதாக சபையில் சேருவோரை உருவாக்கும் பொறுப்பை ஏற்றவர் குரு ஜோசப் பிக்னடெல்லி. இவர் தனது 73வது வயதில் 1811ம் ஆண்டு இறந்தார். இவர் இறந்த மூன்றாண்டுகளுக்குப் பின்னர் திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் இயேசு சபைக்குத் திருச்சபை முழுவதும் புது உரு கொடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.