2009-11-13 17:19:07

சாதீயத் தீமையில் பிளவுபட்டிருக்கும்  இந்திய சமுதாயத்திற்கு நம்  விவிலியக் கண்ணோட்டத்தைக் கொண்டு செல்வது  கிறிஸ்தவர்களின் கடமை, பெல்லாரி ஆயர்


நவ.13,2009 விவிலியம் காட்டும் உலகக் கண்ணோட்டம் அனைவரும் சமம் என்பதையும், மனித உயிர் எல்லா நிலைகளிலும் மதிக்கப்பட  வேண்டுமென்பதையும் கூறுவதால், சாதீயத் தீமையில் பிளவுபட்டிருக்கும் இந்திய சமுதாயத்திற்கு நம் விவிலியக் கண்ணோட்டத்தைக் கொண்டு செல்வது கிறிஸ்தவர்களின் கடமை என்று பெல்லாரி ஆயர்ஹென்றி டிசூசா கூறினார். இவ்வியாழனன்று கிறீஸ்தவ நூல்களின் கண்காட்சியை பெல்லாரியில் துவக்கி வைத்து உரையாற்றிய ஆயர் டி சூசா, சாதீயத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்திய சமூகத்திற்கு விவிலியம் போன்ற புத்தகங்கள் வழியாகவும், விவிலியத்தின் படி வாழும் வாழ்க்கை வழியாகவும் சமத்துவத்தை உருவாக்கும் மாற்று வழிகளைச் சொல்லித்தர முடியும் என்று கூறினார்.

நவம்பர் 15 வரை நீடிக்கும் இந்த புத்தகக் கண்காட்சி பலரையும் ஈர்த்து வருவதாக செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.