2009-11-13 17:20:48

கிரீன்லாந்தின் பனிப்பாறைகள்  வெகு வேகமாகக் கரைந்து வருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்


நவ.13,2009 கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் வெகு வேகமாகக் கரைந்து வருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆண்டொன்றுக்கு 27,300 கோடி டன் எடையுள்ள பனி உருகி வருவதாகவும், இதனால் உலகின் பல இடங்களில் கடல் நீரின் அளவு பெருகி வருவதாகவும் அறிவியலாளர்களின் அறிக்கை ஒன்று கூறுகிறது. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம்  ஆண்டு வரையிலான காலத்தில், பனி உருகுவதால், கடல் நீர் மட்டம் 0.46 மி.மீ. அளவே உயரும் என்ற கணிப்பு மாறி, 2006 ஆம் ஆண்டு முதல் கடல் நீர் மட்டம் 0.75 மி.மீ. என கவலையை உண்டாக்கும் அளவு உயர்ந்துள்ளதென இவ்வறிக்கைக் கூறுகிறது. பொதுவாகவே உலகத்தின் வெப்ப நிலையும், பெருங்கடல்களின் வெப்ப நிலையும் உயர்ந்துள்ளதால் கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் வெகு வேகமாகக் கரைந்து வருவதாக இவ்வறிக்கையில் காரணங்கள் கூறப்பட்டுள்ளன







All the contents on this site are copyrighted ©.