2009-11-12 16:17:22

க்ரோவாசியா நாட்டு அரசுத் தலைவர் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினார்


நவ.12,2009 க்ரோவாசியா நாடு இன்று எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் அந்நாட்டின் அமைதி மற்றும் நிலையானத் தன்மையை ஊக்குவிக்கும் கூறுகள் போன்றவைகுறித்து அந்நாட்டு அரசுத் தலைவர் ஸ்டெபான் மெசிச் இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை, திருப்பீடச் செயலர் மற்று வத்திக்கானின் வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து உரையாடினார்.
இவ்வுரையாடலின் போது, க்ரோவாசியா நாட்டின் கத்தோலிக்கப் பாரம்பரியம், அதன் தொன்மை நிலை, உயிர்த்துடிப்பு போன்றவைக் குறித்தும், கத்தோலிக்கத்தின் தனித் தன்மை மதிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. அரசு அதிகாரிகள், ஆயர் பேரவை மற்றும் சமூகத்தின் அனைத்து அமைப்புகள் இடையேயான பேச்சுவார்த்தைகளின் வழி பொதுநலன் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியமும் க்ரோவாசியா அரசுத் தலைவருக்கும் திருத்தந்தை மற்றும் திருப்பீட உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையேயான சந்திப்பின்போது எடுத்துரைக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.