2009-11-12 16:23:28

இலங்கையின் தமிழர்களையும், சிங்களர்களையும் இணைக்கும் நிகழ் கலைகளின் மையம்


நவ.12,2009 இலங்கையின் ஜாஃப்னா நகரில் உள்ள ஒரு பங்கு கோவிலில் தமிழர்களையும், சிங்களர்களையும் இணைக்கும் ஒரு முயற்சியாக, இவ்விரு இனத்தவரின் பாரம்பரிய நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. நிகழ் கலைகளின் மையம் என்ற அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 26 ஆண்டுகளாக இனப்பிரச்சனையால் பாகுபட்டுக்  கிடந்த இந்த நாட்டை மீண்டும் இணைக்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுவதாக இவ்வமைப்பின் இயக்குனர் அருட்திரு நிக்கோலப்பிள்ளை மரிய சவேரி (Fr.Nicholapillai Maria Saveri) கூறினார். அண்மையில் இரண்டு நாட்களாக நடந்தேறிய இக்கலை விழாவில் ஹிந்துக்கள், இஸ்லாமியர், புத்தர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லா மதத்தினரும் கலந்து கொண்டனர். 18 சிங்களர், 28 தமிழர் என இக்கலைக் குழுவின்  46 இளையோர் பல பாரம்பரிய நடனங்களில் இணைந்து ஆடினர். நடனங்கள் மட்டுமல்லாது, இவ்விரு நாட்களிலும் இக்குழுவினர் உணவு, உறைவிடம் இவற்றைப் பகிர்ந்து கொண்டதும், ஜாஃப்னா நகரில் உள்ள பல மதத்தவர்களின் தொழுகைத் தலங்களுக்குச் சென்றதும் இவர்களிடையே சமாதானத்தை வளர்ப்பதில் பெரிதும் உதவியது என இக்குழுவைச் சார்ந்த திரு சாமிநாதர் கூறினார். இவ்விழாவிற்கு வருகை தந்த ஜாஃப்னா பல்கலைகழகத்தின் பேராசிரியர் நடராஜா பேசுகையில், பாரம்பரிய நடனங்கள் மூலம் இவ்விரு குழுக்களின் சமாதனம் மட்டும் வளர்க்கப்படவில்லை, மாறாக அழிந்து வரும் நமது பாரம்பரியும் பாதுகாக்கப்படுவதற்கு இது போன்ற முயற்சிகள் தேவை என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.