2009-11-11 15:05:01

கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமான உதவிகள் செய்யப்படுவதற்கு வாழ்வுக்கு ஆதரவான நான்காவது சர்வதேச மாநாடு அழைப்பு


நவ.11,2009 மானுடத்தின் வரலாற்றில் இடம் பெறும் இறப்புகளுக்கு மிகப்பெரிய காரணமாகக் கருக்கலைப்பு இருக்கின்றது மற்றும் ஆண்டுதோறும் இதனால் சுமார் ஐந்து கோடி இறப்புகள் ஏற்படுகின்றன என்று வாழ்வுக்கு ஆதரவான நான்காவது சர்வதேச மாநாட்டில் கூறப்பட்டது.
ஸ்பெயின் நாட்டின் சரகோசாவில் இத்திங்களன்று நடந்து முடிந்த இம்மாநாட்டில், கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமான உதவிகள் செய்யப்படுமாறு அரசுகளுக்கும், பொதுநல அதிகாரிகளுக்கும் சமுதாயத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கருவில் ஒவ்வொரு குழந்தை கொல்லப்படும் போதும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றும் ஆயிரம் மெழுகுவர்த்திகள் என்ற திட்டத்தில் இந்தச் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டோர் பங்கு பெற்றனர். ஸ்பெயினில் கருக்கலைப்பு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.







All the contents on this site are copyrighted ©.