2009-11-10 15:20:50

இளையோர் தங்களது உண்மையான நிலையை அறிந்திருந்தால் அவர்கள் மிகுந்த படைப்பாற்றல் திறனுள்ளவர்களாக மாற முடியும், பேராயர் கொர்னேலியுஸ்


நவ.10,2009 இளையோர் தங்களது உண்மையான நிலையை அறிந்திருந்தால் அவர்கள் மிகுந்த படைப்பாற்றல் திறனுள்ளவர்களாக மாற முடியும் என்று, இந்திய ஆயர் பேரவையின் இளையோர் ஆணையத் தலைவர் பேராயர் லியோ கொர்னேலியுஸ் கூறினார்.

இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் மூன்றாவது தேசிய சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் கொர்னேலியுஸ், தலத்திருச்சபையின் அங்கங்களாக இருக்கும் இளையோர், உலகளாவிய திருச்சபையின் உறுப்பினர்கள் என்ற எண்ணத்தை விரிவுபடுத்த வேண்டுமென்று கூறினார்.

திருச்சபையைக் கட்டி எழுப்புவதற்கு அவர்கள் சாதாரணமாகச் செய்யும் பணியைவிடக் கூடுதலாகச் செய்யுமாறும் அவர் வலியுறுத்தினார்.

இந்தத் தேசிய சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்தியாவின் 80 மறைமாவட்டங்கள் மற்றும் 13 மாகாணங்களிலிருந்து சுமார் 500, இளையோர் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.










All the contents on this site are copyrighted ©.