2009-11-10 15:27:59

இலங்கையில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது, இலங்கை அரசு


நவ.10,2009 இலங்கையில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது, அவர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவது வேகம் பெற்று வருகிறது என்று இலங்கை அரசு கூறுகிறது.

இலங்கையின் வடபகுதி முகாம்களில் தற்போது 1,64,000 அகதிகள் இருப்பதாகவும், இவ்வெண்ணிக்கையை வருகிற ஜனவரிக்குள் ஐம்பதாயிரத்துக்கும் குறைவாகக் குறைக்கும் எண்ணம் கொண்டிருப்பதாகவும் அரசு கூறியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இலங்கை அரசு நடத்திவந்த முகாம்களில் 2,88,000 தமிழர்கள் அகதிகளாகத் தங்கியிருந்தனர்.

வடக்குப் பகுதியில் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணி வெடிகளை விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றை அடையாளம் கண்டு அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முன்னர் 14 இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

கடந்த வாரம் மேலும் 5 இயந்திரங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தன. 5 நாடுகள் இந்தப் பணியில் இலங்கை அரசுக்கு உதவுகின்றன. கண்ணி வெடிகளைத் தவிர வெடிக்காத பீரங்கிக் குண்டுகள் போன்றவையும் நிலங்களில் சிதறிக் கிடக்கின்றன.

 








All the contents on this site are copyrighted ©.