2009-11-09 15:17:17

மோதல்கள் இடம் பெறும் காலங்களில் நாடுகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதற்குரிய சிறப்புச் சட்டங்கள் தேவை என்கிறது ஐ.நா.


நவ.09,2009 மோதல்கள் இடம் பெறும் காலங்களில் நாடுகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதற்குரிய சட்டங்கள் தெளிவுபடுத்தப்பட்டு உறுதிபடுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு கூறியது.

இருபது சட்ட நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்ட ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு, சர்வதேச அளவிலான போர்க்காலச் சட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டியுள்ளது.

நிலத்தடி நீர் அமைப்புகள், வேளாண்மை நிலங்கள், பூங்காக்கள், தேசிய காடுகள், உயிரினங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பது குறித்த புதிய சட்ட ரீதியான விதிமுறைகள் அமைக்கப்படுமாறும் அவ்வறிக்கை கூறுகிறது.

சுத்த நீர் அமைப்புகளும் சாகுபடி நிலங்களும் காடுகளும் அழிக்கப்படுவது நேரடியான துன்பங்களுக்கு மட்டுமல்லாமல், போரின் போதும் அதற்குப் பின்னும் மக்கள் வாழ்வதற்கான வாய்ப்புக்களைக் குறைக்கின்றன என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு கூறியது








All the contents on this site are copyrighted ©.