2009-11-09 15:34:14

நவம்பர் 10 புனித திருத்தந்தை பெரிய லியோ திருவிழா


தமிழில் சிங்கராயர் என அழைக்கப்படும் திருத்தந்தை லியோ, உரோமையில் பிறந்தவர். உயர் கல்வி கற்றவர். 440ம் ஆண்டில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இவர் ஆற்றிய 96 மறையுரைகள் இன்றும் போற்றப்படுகின்றன. இவற்றில் பகிர்ந்து வாழ்தல், கிறிஸ்தவ வாழ்வில் சமூக நீதி ஆகியவை பற்றி மிகுந்த அழுத்தம் கொடுத்திருக்கிறார். திருச்சபையில் பெரிய என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் மூன்று புனித திருத்தந்தையர்களுள் ஒருவராக இவர் விளங்குகிறார். 6ம் நூற்றாண்டு புனித திருத்தந்தை முதலாம் கிரகரி, 9ம் நூற்றாண்டு புனித திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் ஆகிய இருவரும் பெரிய அடைமொழியோடு அழைக்கப்படுகின்றனர். திருத்தந்தை லியோ திருச்சபைக் கோட்பாடுகளின் புனிதத்தைக் காப்பதற்கு கடுமையாக உழைத்தார். இவர் திருச்சபையை வழிநடத்திய 21 ஆண்டுகளில் அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். திருச்சபையின் வழிபாட்டு முறைகளில் மக்களின் ஈடுபாட்டை முன்னிறுத்தும் வகையில் மாற்றங்கள் கொணர்ந்தவர்.








All the contents on this site are copyrighted ©.