2009-11-09 15:15:50

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் ஞாயிறு மூவேளை செப உரை.


நவ.09,2009 பாப்பிறை ஆறாம் பவுலின் குருத்துவம், அன்னைமரியின் பாதுகாவலில் எப்பொழுதும் வைக்கப்பட்டிருந்தது மற்றும் அன்னைமரியா மீதான பக்தி அவரது வாழ்க்கை முழுவதும் உடன் சென்றது என்று ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

பாப்பிறை ஆறாம் பவுல் பிறந்த பிரேஷா மாகாணத்திற்கு ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, கொட்டும் மழையிலும் குடைகளை பிடித்தவண்ணம் திறந்தவெளி திருப்பலியிலும் மூவேளை செப உரையிலும் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான விசுவாசிகளிடம் இவ்வாறு தெரிவித்தார்.

1964ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் மூன்றாவது அமர்வின் நிறைவில் திருச்சபை பற்றிய லூமென் ஜென்சியும் என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது, அப்போது அத்திருத்தந்தை ஆற்றிய உரையில், இதன் கடைசி அதிகாரம் முழுவதும் அன்னை கன்னிமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டார் என்றார் அவர்.

இந்தச் சூழ்நிலையில், பாப்பிறை ஆறாம் பவுல், மரியா, திருச்சபையின் தாய் என்று அறிவித்தார் என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மரியா பக்தி பற்றியும் அத்திருத்தந்தை விளக்கினார் என்று கூறினார்








All the contents on this site are copyrighted ©.