2009-11-06 14:53:32

பிலிப்பைன்சில் ஏழ்மையினால் அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டனர்


நவ.06,2009 பிலிப்பைன்சில் ஏழ்மையினால் அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டனர் என்று மனிலா கல்வித்துறை எடுத்த ஆய்வு தெரிவிக்கின்றது.

பிலிப்பைன்சின் ஏறத்தாழ 9 கோடியே 10 இலட்சம் பேரில் முப்பது விழுக்காட்டினர் 18 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் 25 விழுக்காட்டினர் தங்களின் படிப்பை ஒருபொழுதும் முழுவதுமாக முடித்ததில்லை என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது

இந்நிலை பற்றி ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்நாட்டின் குபாவோ ஆயர் ஹோனெஸ்டோ ஓங்டிகோ, பெற்றோர் கல்வியின் மதிப்பை உணர்ந்து பிள்லைகளை பள்ளிக்கு அனுப்புவதற்குத் தேவையான தியாகங்களைச் செய்ய முன்வர வேண்டுமென்று உரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.