2009-11-05 16:18:12

வரலாற்றில் நவம்பர் 06


1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்குத் தலைவரானார்.

1891 - இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் "லேடி ஹவ்லொக்" முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.

1913 - தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

1935 - எட்வின் ஆம்ஸ்ட்ராங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.

1944 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.

1962 - ஐநா பொது சபை தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது








All the contents on this site are copyrighted ©.