2009-11-05 16:17:27

சுற்றுச் சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் உலகின் மதங்கள் ஆற்றிவரும் பணிகளுக்குத் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளார், ஐ.நா. பொதுச் செயலர்


நவ. 05, 2009 இப்பூமியைக் காப்பாற்றும் நோக்கில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் உலகின் மதங்கள் ஆற்றிவரும் சிறப்புப் பணிகளுக்குத் தன் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளார், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.
இங்கிலாந்து தலைநகரிலுள்ள வின்ட்சர் மாளிகையில் 200 க்கும் மேற்பட்ட மதப் பிரதிநிதிகளைச் சந்தித்த ஐ.நா. பொதுச் செயலர், இவ்வுலகைப் பாதுகாப்பதற்கான ஐ.நா.வின் ஏழாண்டு திட்டத்தில், மதங்களின் பங்களிப்பு குறிப்பிடும்படியானதாக உள்ளது என்றார்.
சுற்றுச் சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உலகின் மதங்கள் ஐ.நா. அமைப்புகளோடு இணைந்து உழைக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன் வைத்தார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.உலகின் பள்ளிகளில் பாதி மத அமைப்புகளால் நடத்தப்படுவதால், மக்களிடம் நல்ல கருத்துக்களை எடுத்துச் செல்வது அவைகளுக்கு எளிது என்ற அவர், மதங்களே மக்களுக்கு நற்சிந்தனைகளின் தூண்டுகோலாகவும், நம்பிக்கையாகவும் உள்ளன எனவும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.