2009-11-05 16:16:28

எல் சால்வதோர் நாட்டில் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஆறு இயேசு சபையினருக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது


நவ. 05, 2009 1989 ஆம் ஆண்டு எல் சால்வதோர் நாட்டில் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஆறு இயேசு சபையினரை, அந்நாட்டின் மிக உயரிய விருதை வழங்கி கௌரவிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் எல் சால்வதோர் நாட்டு அரசுத் தலைவர் மவ்ரிஸியோ புநெஸ். (Mauricio Funes).
இக்கொலைகள் இடம்பெற்றதன் 20ஆம் ஆண்டு நினைவு நாளான இம்மாதம் 16ஆம் தேதியன்று Jose Matias Delgado தேசிய விருதை வழங்கி அவர்களை  கௌரவிப்பது, முந்தைய அரசுகளின் தவறுகளுக்கான பாவக் கழுவாயாக இருக்கும் என்றார் அரசுத் தலைவர்.மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் முதல்வராக இருந்த போதிலும், தன் பேராசிரியர்களுடன் இணைந்து வார இறுதி நாட்களில் கிராமப்புற ஏழைகளிடையே பணியாற்றிய ஸ்பானிய குரு இஞ்ஞாஸியோ எல்லாகூரியா (Ignacio Ellacuria) மற்றும் அவரின் உடன் உழைப்பாளிகளான இயேசு சபை குருக்கள் Arnando Lopez, Juan Ramon Moreno, Ignacio Martin Bario, Segundo Montes, Joaquin Lopez y Lopez ஆகியோரும் அவர்கள் வீட்டுபப்பணியாளும், அவரது 15 வயது மகளும் 1989ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.