2009-11-04 16:08:09

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்.


நவ. 04. புனித ராயப்பர் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தையின் மறை போதகம் இடம்பெற்றது.

இறையியலானது துறவுமட வாழ்வாலும், அறிவு சார்ந்த கல்வி நிலைப்படுகளாலும் எவ்வாறு அணுகப்பட்டது என்பதன் ஒப்புமை குறித்து நாம் கடந்த வாரம் நோக்கியதன் தொடர்ச்சியை இப்போது காண்போம் என தன் புதன் பொது மறைபோதகத்தைத் துவங்கினார் பாப்பிறை 16 ஆம் பெனெடிக்ட். Clairvaux ன் புனித பெர்னார்தும், அபெலார்டும்  இறையியலை, அறிவை அடிப்படையாகக் கொண்டு தேடும் விசுவாசமாக நோக்கினர். அதிலும் கூட, பெர்னார்ட் விசுவாசம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க, அபெலார்டோ அதில் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இறையியலின் நோக்கமே, இறைவனுடன் ஆனா உயிர் துடிப்புடைய அனுபவம் என்பதைப் புரிந்துகொண்டிருந்த பெர்னார்ட், விசுவாச மறையுண்மைகளை முற்றிலுமாக அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற அறிவு புகழாரத்திற்கு எதிராக எச்சரித்தார். தத்துவயியலின் உள்ளொளியை இறையியலிலும் புகுத்த முயன்ற அபெலார்டோ ஏனைய மதங்களிலும் கிறிஸ்துவுக்குத் தங்களைத் திறப்பதற்கான விதைகள் இருப்பதைக் கண்டார். இந்த இருவரின் அணுகுமுறைகளும் ஒன்று இதயத்தின் இறையியலாகவும் மற்றொன்று பகுத்தறிவு வாதத்தின் இறையியலாகவும் இருந்து ஒருவித பதட்ட நிலைக்கான காரணமாகவும் அமைந்தது. ஆகவே, இவைகள் ஆரோக்கியமான ஒரு இறையியல் விவாதத்தின் முக்கியத்துவம் மற்றும் திருச்சபை அதிகாரிகளுக்குத் தாழ்ச்ச்சியுடன் கூடிய கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை விவரிக்கின்றன. வெளிப்பாடுகளிலிருந்து பெறப்படும் கொள்கைகளுக்கு விளக்கமளிக்க எவ்வாறு தத்துவயியல் பயன்படுத்தப் படுகின்றதோ, அவ்வாறே அக்கொள்கைகளை மதிக்க இறையியல் முன்வருகிறது. எப்போதெல்லாம் இறையியல் முரண்பாட்டு மோதல்கள் உருவாகின்றனவோ, அப்போதெல்லாம் விசுவாசத்தின் கூறுபடாத் தன்மையை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும், குறிப்பாகத் திருச்சபை ஆசிரிய வெளியீட்டிற்கு உள்ளது. நற்செய்தியை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான நம் முயற்சியில், அதன் உண்மையைப் பிறரன்பில் உயர்த்திப் பிடிப்பதற்கான பலத்தை இறைவன் நமக்கு வழங்குவாராக.

இவ்வாறு, தன் புதன் போது மறைப் போதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். அதன் பின்னர், அதே வளாகத்தில் இலங்கையிலிருந்து வந்திருந்த இந்து, புத்த, இஸ்லாம் மத பிரதிநிதிகள் குழுவை ஒரு சில நிமிடங்கள் சந்தித்தார். 








All the contents on this site are copyrighted ©.