2009-11-04 14:54:31

குடியேற்றதாரர் குறித்த பிரச்சனை, பலதுறைகளை நாடுகளும் சர்வதேச சமுதாயமும் இணைந்து தீர்க்க வேண்டியதாக இருக்கின்றது, பேராயர் மர்க்கெத்தோ


நவ.04,2009 இன்றைய குடியேற்றதாரர் குறித்த பிரச்சனை, சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார சமயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருப்பதால் இதனை நாடுகளும் சர்வதேச சமுதாயமும் இணைந்து தீர்க்க வேண்டியதாக இருக்கின்றது என்று பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ கூறினார்.
கிரீசின் ஏத்தென்சில் நடைபெற்று வரும் குடியேற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஐ.நா.கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றிய, குடியேற்றதாரருக்கான திருப்பீட அவைச் செயலர் பேராயர் மர்க்கெத்தோ, தொழில் துறையில் குடியேற்றதாரர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் விளக்கினார்.
தொழிலில் ஆட்குறைப்பும் சமூக வளங்கள் வீணடிக்கப்படுவதும், தொழிலாளர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, அவர்களின் குடும்ப உறவுகளிலும் அவர்கள் சார்ந்துள்ள சமூக கட்டமைப்பிலும் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
நீதியையும் பொது நலனையும் உள்ளடக்கிய அன்புக் கலாச்சாரம் கட்டி எழுப்பப்பட வேண்டுமென்பதையும் அவர் வலியுறுத்தினார்.இன்றைய குடியேற்றதாரர் குறித்த பிரச்சனைக்கு எந்த ஒருநாடும் தனியாகத் தீர்வு காண முடியாது என்பதால் இதை உலகளாவிய சவாலாக ஏற்று இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் பேராயர் மர்க்கெத்தோ.







All the contents on this site are copyrighted ©.