2009-11-02 16:22:35

பாகிஸ்தானில் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பிற்கென அதிக அளவில் செலவழிக்க வேண்டியுள்ளது, கத்தோலிக்க நிர்வாகிகள் கவலை


நவ.02,2009 பாகிஸ்தான் நாட்டில் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பிற்கென அதிக அளவில் செலவழிக்க வேண்டியிருப்பதாக பஞ்சாப் மாகாண கத்தோலிக்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

அண்மைப் பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் எட்டு அடி உயர சுற்றுச்சுவரை கொண்டிருக்க வேண்டும், கண்காணிப்பு காமிராவையும் உடலில் குண்டோ ஆயுதங்களோ மறைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சோதிக்கும் கருவியையும் கொண்டுள்ளதுடன் ஆயுதம் தாங்கிய இரு காவலர்களையும் நியமிக்க வேண்டும் என்ற மாகாண அரசின் கட்டளையையும் கத்தோலிக்க நிர்வாகிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளுக்கு இத்தகைய பாதுகாப்புகள் அரசாலேயே வழங்கப்படும் வேளை, தனியார் மற்றும் கத்தோலிக்கப் பள்ளிகள் இந்த அத்தனை பாதுகாப்புச் செலவுகளையும் தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என லாகூரின் திருஇதயப் பேராலய பள்ளி முதல்வர் அருட்சகோதரி பாரவீன் ரஹ்மாட் உரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.