2009-10-31 15:47:56

மேற்கு ஆப்ரிக்காவின் கடல் அரிப்பைத் தடுப்பதற்கு ஐ.நா நடவடிக்கை


அக்.31,2009 மேற்கு ஆப்ரிக்காவின் பல நாடுகளின் சுமார் எண்பது விழுக்காட்டு மக்கள் கடற்கரைக்கருகில் வாழ்ந்து வரும் வேளை, கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐ.நா. திட்டமிட்டுள்ளது.

தற்போதைய வெப்பநிலை மாற்றத்தினால் மேற்கு ஆப்ரிக்காவின் கடற்கரைப் பகுதிகள் குறைந்து வருகின்றன, கடல் அரிப்பினால் நிலப்பகுதி மறைந்து வருகின்றது என்றுரைக்கும் ஐ.நா.நிறுவனம், அதனைத் தடுப்பதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது.

கேப் வெர்தே, காம்பியா, கினி-பிசாவ், மௌரித்தானியா, செனகல் ஆகிய ஐந்து நாடுகளில் ஐ.நா. தனது இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தீர்மானித்துள்ளது.

ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட அமைப்பு, உலக சுற்றுச் சூழல் அமைப்பு உட்பட சில அரசு சாரா அமைப்புகள், சில தனியார் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து இதனை நடத்தவுள்ளன.

 








All the contents on this site are copyrighted ©.