2009-10-31 15:47:06

புனிதை ஜான் ஜூகன் பெயரில் தபால்தலை


அக்.31,2009 ஏழைகளின் சிறிய சகோதரிகள் துறவு சபையை ஆரம்பித்த புனிதை ஜான் ஜூகன் பெயரில் இந்தியாவின் கர்நாடக அரசு தபால்தலை ஒன்றை அக்.29ம் தேதி யன்று வெளியிட்டுள்ளது.

புனிதை ஜான் ஜூகன் இந்த அக்டோபர் 18ம் தேதி, திருத்தந்தை 16ம் பெனடிக்டால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டது மற்றும் அப்புனிதை இறந்ததன் 130ம் ஆண்டை முன்னிட்டு இத்தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.

அச்சபையினர் நடத்தும் பெங்களூர் ரிச்மண்ட் டவுன் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுனர் பர்த்வாஜ் இதனை வெளியிட்டார்.

இந்நிகழ்வில், பெங்களூர் பேராயர் பெர்னார்டு மொராஸ், தபால்நிலைய தலைமை அதிகாரி எம்.பி.ராஜன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய ஆளுனர் பர்த்வாஜ், ஏழைகளின் சிறிய சகோதரிகள் முதலில் கொல்கத்தாவிற்கு வந்தனர். அங்கு 127 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதியோர் இல்லத்தை ஆரம்பித்தனர். 1900மாம் ஆண்டில் பெங்களூர் வந்தனர் என்றார். புனிதை ஜூகன், ஏழை முதியோரின் நம்பிக்கை என்றும் அவர் பாராட்டினார்.

தற்சமயம் இசசபையின் 2700 அருட்சகோதரிகள், 32 நாடுகளில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட உதவி தேவைப்படும் முதியோருக்கு பணியாற்றி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.