பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள் எட்டாம்
நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கிரேகோரியாரின் காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று
கொண்டாடப்பட்டது. திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர்கள் பல ஆயிரம் பேர் இருந்தபோதிலும்
இந்தவகை அங்கீகாரம் பெறாமல், ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இந்தத்
திருநாள் கொண்டாடப்படுகிறது.