பிலிப்பைன்ஸ்நாட்டில் கடத்திசெல்லப்பட்டகுரு மைக்கில்சின்னோட்உயிருடன் இருப்பதாக - MILF என்ற
இஸ்லாமியக்குழு அறிவிப்பு
அக். 26, 2009 பிலிப்பைன்ஸ் நாட்டில் இருவாரங்களுக்கு முன்னர் கடத்தி செல்லப்பட்ட அயர்லாந்து
குரு மைக்கில் சின்னோட் உயிருடனேயே இருப்பதாகவும், அவரின் இருப்பிடம் குறித்த தகவல்கள்
கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது பிலிப்பைன்சின் MILF என்ற இஸ்லாமியக் குழு. பிலிப்பைன்ஸ்
நாட்டில் உடல் ஊனமுற்ற குழந்தைகளிடேயே 42 ஆண்டுகள் பணியாற்றியுள்ள 78 வயதான அயர்லாந்து
குரு சின்னோடின் விடுதலைக்காக அரசுடன் இணைந்து பணியாற்றி வரும் MILF குழு உரைக்கையில், அவர்
கடத்தி வைக்கப்பட்டிருக்கும் இடம் அறியப்பட்டுள்ளதாகவும், அவரின் விடுதலையைப் பெற பேச்சுவார்த்தைகள் இடம்
பெறுவதாகவும் தெரிவித்தது.