2009-10-26 16:20:29

ஆப்பிரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவைக்கூட்டம் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்டார் திருப்பீட பேச்சாளர்


அக். 26, 2009 மேலும், கத்தோலிக்கத் திருச்சபையானது, ஆப்பிரிக்கக் கண்டத்திற்க்காகப் பணி புரிவது மட்டுமல்ல, அக்கண்டத்தோடு இணைந்து நடை போடுவதற்கும் தன்னை அற்பணித்துள்ளது என்றார் திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் இயேசுசபை குரு பெதேரிகோ லோம்பார்தி. “ஒக்டாவா திஎஸ்” எனும் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஞாயிறு நிறைவுற்ற ஆப்பிரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவைக்கூட்டம் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட திருப்பீட பேச்சாளர், இப்பேரவைக் கூட்டத்துடன் ஆப்பிரிக்க திருச்சபையின் பயணம் ஒரு புதிய சகாப்தத்துக்குள் நுழைவதாகத் தெரிவித்தார்.
பேரவைத் தந்தையர்களின் கலந்துரையாடல்கள் வழி, வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ள நேர்த்தியான நல்ல அனுபவங்கள், மீண்டும் முன்னிறுத்தப்பட்டு, நம்பிக்கைக்கான பலமாகப் பரிந்துரைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார், திருப்பீட பேச்சாளர்.







All the contents on this site are copyrighted ©.