2009-10-26 16:19:15

ஆப்பிரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவைக் கூட்டத்தின் நிறைவு திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


அக். 26, 2009 ஆப்பிரிக்கத் திருச்சபை மன வலைமையுடயதாய், அக்கண்டத்திற்கான புதிய நற்செய்தி அறிவித்தலைத் துவக்க வேண்டுமென ஊக்கமளிப்பதாக அறிவித்தார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்.
33 கர்தினால்கள், 79 பேராயர்கள், 156 ஆயர்கள் கலந்து கொண்ட ஆப்பிரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவைக் கூட்டத்தினை நிறைவு செய்யும் இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் மறையுரைஆற்றிய பாப்பிறை, ஏழ்மை, நோய், அநீதி, போர், வன்முறை போன்றவைகளால் துன்புறும் ஆப்பிரிக்க மக்களைச் சிறப்பான விதத்தில் நினைவு கூர்வதாகக் கூறினார்.
இவ்வுலகிலுள்ள இத்திருச்சபை, நாடுகளுக்கும் சமூகங்களுக்கும் மத்தியில் உப்பாகவும்,  ஒளியாகவும் இருந்து, அமைதிக்கும், நீதிக்கும் உழைக்கும் ஒப்புரவு பெற்ற மக்களைக்  கொண்ட சமூகமாக உள்ளது என தன் மறையுரையில் எடுத்தியம்பினார் பாப்பிறை. ஒப்புரவு பெற்ற திருச்சபையானது ஆப்பிரிக்க கண்டத்து நாடுகளின் ஒப்புரவுக்கு புளிக்காரமாகச் செயல்பட முடியும் என மேலும் உரைத்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.