2009-10-24 17:43:51

இன்றைய புனிதர்: புனித க்ரிஸ்பின், க்ரிஸ்பினியன்


ரோமையில் பிறந்த இவ்விரு புனிதரும், பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துவ வேதத்தைப் பரப்ப இரண்டாம் நூற்றாண்டின் இடையில் முயன்றனர். பிரபு குடும்பத்தில் பிறந்த இவ்விருவரும் பகல் நேரங்களைப் போதிப்பதிலும், இரவில் செருப்பு தைக்கும் எளிய பணியிலும் செலவிட்டனர்.
இவர்களது எளிய வாழ்வையும், போதனைகளையும் கண்ட பலர் திருமறையைத் தழுவினர். மாக்சிமியன் என்ற ரோமையப் பேரரசன் இவர்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கு ரிக்தியோவாரஸ் (Rictiovarus) என்ற தளபதியின் கையில் ஒப்படைத்தான். இவர்களைப் பல்வேறு வகையில் சித்ரவதை செய்த தளபதி, இவர்கள் எந்த ஒரு சித்ரவதையிலும் இறவாமல் இருந்தது கண்டு, அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த நெருப்பில் அவனே குதித்து தன்னை அழித்துக் கொண்டான். பின்னர், மாக்சிமியன் ஆணைப்படி, இவர்கள் தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.