2009-10-23 18:06:13

இயற்கையைப் பாதுகாப்பதில் விசுவாசிகளின் பங்கு அவசியமானது - கிரேக்க ஆர்தொடாக்ஸ் சபைத் தலைவர்


அக். 23, 2009 இயற்கையைப் பாதுகாப்பதில் விசுவாசிகளின் பங்கு அவசியமானது என்று கூறியுள்ளார் கிரேக்க ஆர்தொடாக்ஸ் சபைத் தலைவர் முதலாம் பர்த்தலோமேயு. "பசுமைத் தந்தை" என்று அழைக்கப்படும் முதலாம் பர்த்தலோமேயு, இவ்வியாழனன்று  அமெரிக்காவின் மெம்பிஸ் நகரில் 8வது அகில உலக சமயம், அறிவியல், சுற்றுசூழல் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார். வரும் ஞாயிறு வரை நடைபெறும் இக்கருத்தரங்கு அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் நடத்தப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு கத்ரீனா சூறாவளியால் நியூ ஆர்லியன்ஸ் பகுதி அதிகமாகப் பாதிக்கப்பட்டதால், சுற்றுச் சூழல் குறித்த இந்தக் கருத்தரங்கு அங்கு நடத்தப்படுவது மிகவும் பொருத்தமானது என்று  முதலாம் பர்த்தலோமேயு கூறினார்.







All the contents on this site are copyrighted ©.