2009-10-22 13:25:17

வறுமையைத் தவறான வழிகளில் பயன்படுத்துவதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார் மெக்ஸிகோவின் பேராயர்


அக். 22, 2009 வறுமையை வைத்து வியாபாரப் பலன் அடைவோருக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார், மெக்ஸிகோவின் புயெப்லா உயர்மறை மாவட்டப் பேராயர் விக்டர் ஸான்செஸ் எஸ்பினோஸா. வறுமையைத் தவறான வழிகளில் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வறியோரைப் பாதுகாப்பது மனித குலத்தின் தலையாயக் கடமை என்று பேராயர் எஸ்பினோஸா கூறினார். வறுமை இந்த உலகத்தில் அனைத்து நிலைகளையும் பாதிக்கின்றது. எனவே, அரசு, திருச்சபை, தனியார் துறைகள் என்று எல்லாருமே இணைந்து வறுமையை வேரோடு களைவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டுமென பேராயர் எஸ்பினோஸா வலியுறுத்தியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.