2009-10-22 13:23:10

ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கான உரை - பேராயர் மிலியோரே


அக். 22, 2009 ஆப்பிரிக்கா குறித்த தப்பெண்ணங்கள் களையப்பட்டு, அந்நாட்டிற்கான வளர்ச்சி உதவிகள் ஒருமைப்பாட்டுணர்வுடன் வழங்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார், ஐ.நா விற்கான திருப்பீட அதிகாரி பேராயர் செலெஸ்டினோ மிலியோரே.
ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கான பொருளாதார ஒத்துழைப்பின் புதிய வடிவங்கள் குறித்து ஐ.நா போது அவையில் இப்புதனன்று உரையாற்றிய ஐ.நா விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் மிலியோரே, கொடிய வறுமை, ஆட்சிக் கவிழ்ப்புகள், ஊழல், மோதல்கள் என்ற குற்றச்சாட்டுகளைப் புறம் தள்ளி, அக்கண்டத்தின் நல்ல எடுத்துக்காட்டுகளையும் நோக்க வேண்டிய நேரமிது என்றார்.ஆப்பிரிக்காவின் ஏழ்மையை அகற்ற ஏனைய நாடுகள் உதவுவது மட்டுமல்ல, அதன் உண்மை பலமும் மற்றவர்களால் உணரப்பட்டு பகிர்ந்துகொள்ளப் படவேண்டும் எனவும் கூறிய திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், ஆப்பிரிக்காவின் வியாபாரம், பொருளாதாரம், மற்றும் கலாச்சார ஒத்துழைப்பிற்கும் அமைதி நட்புக்கும், மீண்டும் நாட்டை கட்டி எழுப்புவதற்கும் போதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஊக்கமளிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.