2009-10-21 11:19:10

ஆஸ்திரேலிய பிரதமர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள  பிரிஸ்பேன் மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி அவை அழைப்பு


இலங்கையில் தமிழர்கள் அரசால் அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது நிறுத்தப் படுவதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அந்நாட்டின் பிரிஸ்பேன் மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி அவை அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையிலிருந்து வரும் அகதிகளை நாட்டிற்குள் அனுமதிப்பதில் தயக்கம் காட்டிவரும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட், பல ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் இலங்கை அரசால் அடைத்து வைக்கப்பட்டு, துன்பங்களை அனுபவிப்பது குறித்து மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார், தலத் திருச்சபை அதிகாரி பீட்டர் ஆர்ன்ட்.

ஐ.நா. பிரதிநிதிகள், பல சர்வதேச அமைப்புகள், நீதித் துறைக்கான சர்வதேச அமைப்பு, மற்றும் Human Rights Watch போன்றைவைகள் இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து குற்றம் சாட்டும் வேளை, ஆஸ்திரேலிய பிரதமரோ, அந்நிலைகள் குறித்து தன் குரலை எழுப்பாததோடு, தப்பி வரும் தமிழர்களை நாட்டிற்குள் ஏற்கவும் தயங்குகிறார் என குற்றம் சாட்டினார் திருச்சபை அதிகாரி.








All the contents on this site are copyrighted ©.