2009-10-21 16:31:25

ஆப்ரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் துன்புறும் மக்களுடன் பேரவைத் தந்தையர்கள் ஒருமைப்பாடு


அக்.21,2009 ஆப்ரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் தொடர்ந்து இடம் பெறும் வன்முறையால் துன்புறும் மக்களுடனான தோழமையுணர்வை வெளிப்படுத்தும் செய்தியை அனுப்பியுள்ளனர் பேரவைத் தந்தையர்கள்.

ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவையில் பங்கு கொள்ளும் பேரவைத் தந்தையர்கள் இணைந்து, தங்களது ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் செய்தியை, சூடான், உகாண்டா, சாட், காங்கோ ஜனநாயக குடியரசு, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளின் ஆயர்கள் பேரவைகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த நாடுகளில் தொடர்ந்து நடைபெறும் போரினால் ஏற்படும் அழிவுகளும், அப்பாவி மக்களின் இறப்புக்களும் வன்முறையும் தங்களுக்கு மிகுந்த கவலை தருவதாகவும் பேரவைத் தந்தையர்களின் செய்தி கூறுகிறது.

அதேசமயம், போரில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது ஆயுத மொழிகளை, உரையாடல் மற்றும் இணக்கப் பேச்சுவார்த்தைகளாக மாற்றுமாறும் அச்செய்தி அழைப்பு விடுக்கிறது.

ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவை வருகிற ஞாயிறன்று வத்திக்கான் பசிலிக்காவில் நடைபெறும் திருப்பலியுடன் நிறைவு பெறும்.








All the contents on this site are copyrighted ©.