2009-10-21 11:18:24

ஆங்கிலிக்கன் சபையிலிருந்து கத்தோலிக்கத் திருச்சபைக்குள் இணைய முயலும் அங்கத்தினர்களின் நிலை - திருப்பீடம் அறிக்கை


ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையிலிருந்து கத்தோலிக்கத் திருச்சபைக்குள் இணைய முயலும் அங்கத்தினர்களின் நிலை மற்றும் அதில் இரு சபைகளின் நிலைப்பாடு குறித்து திருப்பீடமும், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

கத்தோலிக்க திருச்சபையோடு முழு ஐக்கியத்தை விரும்பும் ஆங்கிலிக்கன் குருக்கள் மற்றும் பொதுநிலையினர் குறித்த விதிகளை வெளியிட்டுள்ள திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு பேராயம், திருமணம் புரிந்த ஆங்கிலிக்கன் குருக்கள் கத்தோலிக்கத் திருச்சபையிலும் குருக்கலாகத் திருநிலைப் படுத்தப்படலாம், ஆனால் திருமணம் புரிந்த ஆங்கிலிக்கன் குருக்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட முடியாது என தெரிவிக்கிறது.

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் குறும்பட மாணவர்கள், கத்தோலிக்க குறும்பட மாணவர்களோடு இணைந்து பயிற்சி பெறுவதையும், அதே வேளை, அவர்களுக்கான ஆன்மீக திருவழிபாட்டு பரம்பரியங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கென தனி பயிற்சி வகுப்புகளைக் கொண்டிருப்பதையும் பரிந்துரைக்கிறது திருப்பீடத்தின் இப்பேராயம்.
அண்மைக் காலங்களில் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை பெண்களைக் குருக்களாகத் திருநிலைப்படுத்துதல், ஒரேபாலின திருமணங்களை ஆதரித்தல் போன்றவைகளில் முரண்பாடுகளைச் சந்தித்தாலும் ஐக்கியத்திற்கான முயற்சிகளில் கத்தோலிக்கத் திருச்சபை மேலும் அற்பனத்துடநேயே செயல்படுகிறது எனவும் கூறுகிறது திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாடுகளுக்கான பேராயத்தின் அறிக்கை.







All the contents on this site are copyrighted ©.