2009-10-19 14:49:31

ஐரோப்பிய பிரதிநிதிக் குழுவுக்கு திருத்தந்தையின் உரை


அக்.19,2009 மனிதன், மிகவும் விலைமதிப்பிட முடியாத சொத்து என்ற ஐரோப்பிய பாரம்பரியத்தின் உயரிய நோக்கு, அக்கண்டத்தின் அளப்பரிய அறிவார்ந்த, கலாச்சார, மற்றும் பொருளாதாரத்தில் வளமையடைந்தால் அக்கண்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி தொடர்ந்து மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

ஐரோப்பிய சமுதாய அவை ஆணையத்தின் பிரதிநிதித் தலைவர் ஈவெஸ் காஸ்ஸோவை திருப்பீடத்தில் இத்திங்களன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய சமுதாய அவையில் காக்கப்படும் விழுமியங்களுக்கு அடிப்படை காரணம் அக்கண்டத்தின் கிறிஸ்தவ மூலமே என்றும் கூறினார்.

பொருளாதார இலாபத்திற்கும் சமூகத் தேவைக்கும் இடையேயான இடைவெளி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித வாழ்வு தாயின் கருவறை முதல் இயற்கையான மரணம் அடையும் வரை மதிக்கப்படுதல், ஆணுக்கும் பெண்ணஉக்கும் இடையே நடைபெறும் திருமணத்தின் அடைப்படையிலான குடும்பம் போன்ற எதிர்காலச் சவால்களை ஐரோப்பா எதிர் கொள்வதையும் எடுத்துச் சொன்னார் திருத்தந்தை.

ஐரோப்பா, தனது இயல்புத் தன்மையையும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியையும் ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தாவிட்டால் அக்கண்டம் தனக்குத் தானே உண்மையாக இருக்க இயலாது என்றும் காஸ்ஸோவிடம் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.