2009-10-19 14:52:58

உலகில் வளர்ச்சி குன்றியிருப்பதற்கு மக்கள்தொகை பெருக்கம் காரணம் அல்ல, மாறாக பொறுப்பற்ற அரசியல்வாதிகளே, பேராயர் மிலியோரே


அக்.19,2009 உலகில் வளர்ச்சி குன்றியிருப்பதற்கு மக்கள்தொகை பெருக்கம் காரணம் அல்ல, மாறாக பொறுப்பற்ற அரசியல்வாதிகளும், பொறுப்பற்ற உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதாரக் கொள்கைகளுமே காரணம் என்று ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே கூறினார்.

மக்கள் தொகையும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் கெய்ரோ மாநாட்டின் 15வது ஆண்டை நினைவுகூரும் விதமாக இடம் பெற்ற 64வது ஐ.நா.பொது அமர்வில உரையாற்றிய பேராயர் மிலியோரே, ஏறத்தாழ நூறாண்டுகளாக மக்கள் தொகை பெருக்கம் சார்ந்த விவகாரங்களைக் கட்டுபடுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள், உலகில் மனிதனே மிகப்பெரும் வளமை என்பதை நிரூபித்துள்ளன என்றார்.

சில உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஏழைநாடுகளின் மக்கள் தொகை பெருக்கமே உலகளாவிய தூய்மைக் கேட்டிற்கும் வளர்ச்சியின்மைக்கும் காரணம் என்று 1994ம் ஆண்டில் கெய்ரோ கருத்தரங்கில் சுட்டிக்காட்டினர், அவர்கள் கருக்கலைப்பு, கருவளக்கேடு போன்றவற்றை ஊக்குவிக்க விரும்பினர் என்றும் குறை கூறினார் அவர்.

அனைவருக்கும், குறிப்பாக, பெண்களுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பேராயர் மிலியோரே, குடியேற்றதார்ர்கள் குடியேறிய நாடுகளின் சமூகத்தோடு ஒன்றிணைக்கப்படுவதன் அவசியம் பற்றியும் கோடிட்டுக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.