2009-10-16 17:04:35

உலகில் நிலவும் பசிக்கொடுமையை அகற்றுவதற்கு, வாழும் முறையிலும் சிந்திக்கும் முறையிலும் மாற்றம் தேவை, திருத்தந்தை


அக்16,2009 உலகில் நிலவும் பசிக்கொடுமையை அகற்றுவதற்கு, வாழும் முறையிலும் சிந்திக்கும் முறையிலும் மாற்றம் தேவை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், FAO இயக்குனர் ஜாக் தியோப்புக்கு அனுப்பிய செய்தி கூறுகிறது.

அக்டோபர் 16ம் தேதி இவ்வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட உலக உணவு தினத்தையொட்டி FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன இயக்குனர் தியோப்புக்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி விவசாயிகளை அதிகம் பாதித்துள்ளது என்றும் வேளாண்மைத் தொழிலை மதித்தல், உணவுப் பொருட்களின் பாதுகாப்புக்கு இன்றியமையாத கூறு என்றும் கூறி இத்தொழிலுக்கெனப் போதுமான அளவு முதலீடுகளும் வளங்களும் கிடைப்பதற்கு வழி செய்யப்பட வேண்டுமென திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

உணவுப் பொருளைப் பெறுவது மனிதரின் அடிப்படை உரிமை என்பதால் இது செயலில் காட்டப்படுமாறும் அச்செய்தி வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்தியாவில் ஆறு வயதுக்குட்பட்ட சிறாரில் 47 விழுக்காட்டினர் ஊட்டச்சத்துக்குறைவோடு உள்ளனர் என்று ஆக்ஷன் எய்ட் என்ற ஓர் அரசு சாரா அமைப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.