2009-10-15 16:58:15

வரலாற்றில் அக்டோபர் 16 புனிதைகள் எட்விஜ், அலகோக் மார்க்ரீத் மேரி


ஹங்கேரி நாட்டு அரசனின் மகளான எட்விஜ், 12 வயதில் போலந்து நாட்டு ஹென்றிக்கு வாழ்க்கைப்பட்டாள். ஆறாவது மகளைப் பெற்றெடுத்த பின்னர் கணவரின் சம்மதத்தோடு இருவரும் கற்பு என்னும் புண்ணியத்தில் வளர வார்த்தைப்பாடு எடுத்தனர். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் கணவர் இறந்த பின்னர் சிஸ்டெர்ஷியன் துறவு சபையில் சேர்ந்தார்.

1793 - பிரெஞ்சுப் புரட்சியில் பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மரீ அண்டோனெட் கில்லட்டினால் கழுத்து வெட்டப்பட்டாள்.

1799 - பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்

1942 - பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்

1951 - பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலி கான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அக்டோபர் 16 உலக உணவு நாள்








All the contents on this site are copyrighted ©.